|
|
| About Us |
|
|
புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி - வேப்பூர்
|
St. Joseph’s (Matriculation and Higher Secondary) School (SJS), academically managed by Holy Cross Sisters, guided by Rev. Fr. Dr. Roy Lazar is committed to excellence in education and holistic development of the integral personality of your children especially from the poor and marginalised communities of this region! This is the school where your children learn to live as healthy, intelligent and efficient global citizens of the digitalised world but rooted in the rich culture and religious traditions of our ancient country. They learn in the green portals of this glowing school not only to master computer and harness the sources of knowledge but also to have compassion and social concern. SJS is a place where students learn to dream high and to lead the future!
|
|
அருட் தந்தை சேவியர் அவர்களின் சீரிய முயற்சியால் மேதகு ஆயர் ஏ.எம். சின்னப்பா அவர்களின் நல்லாசீர் மற்றும் ஒத்துழைப்புடன் புனித சூசையப்பர் மெட்ரிக் மேநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு, தற்போது மேதகு ஆயர் சவுந்தர ராஜு பெரிய நாயகம் அவரகளின் நல் ஆசீருடன் அருட் தந்தை முனைவர் ராய் லாசர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகின்றது. "தேசதிற்க்கும் தேவனுக்கும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க" என்ற குறிக்கோளுடன், ஒழுக்கத்துடன் சேர்ந்த சிறந்த கல்வி, நேரிய வழியில் தரமான நூறு சதவீத தேர்ச்சி, கலை, விளையாட்டு துறைகளில் பயிற்ச்சி, முழு ஆளுமை வளர்ச்சி போன்ற...
|
|
1996ல் 87 மாணாக்கர்களுடன் துவங்கப்பட்ட இப்பள்ளி குறுகிய காலத்திற்குள் 2000 மாணவ மாணவிகளை கொண்டிருப்பது இப்பள்ளியின் வளர்ச்சியை காட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் பத்தாம், 12 வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேலும் புகழின் உச்சத்தை அடைந்துள்ளது. மாணவ மாணவிகளிள் கல்வியை மலர்விக்க பல வசதிகளை கொண்டு தன்னிறைவு பெற்றதாக இருகிறது. குறிப்பாக கணிபொறி, வேதியியல், இயற்பியல், தாவரவியல் ஆகியவற்றிற்கான ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன. மேலும் பயிற்று மொழிகளாக தமிழ், பிரஞ்சு, ஜெர்மென் ஆகிய மொழிகளிலும் கற்றுதரப்படுகின்றன.
|
|
மாணவர்கள் முடிவெடுக்கும் ஆற்றல், எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளும் தன்னம்பிக்கை மற்றும் பல கலைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். கராத்தே, ந்டனம், ஓவியம், இசை, ஆகிய துறைகளில் மாணாக்கர்கள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் பல போட்டிகளை ந்டத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. சமூகபிரச்சனைகளிலும், தேசிய ஒருமைப்பாட்டு உணர்விலும் எதிர்கால குடிமக்களை உருவாக்க தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணி, செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரண சாரணியர் இயக்கம் போன்ற பல அமைப்புகள் சிறப்பாக நடத்தபட்டுவருகின்றன. மேலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்று மாணவர்கள் பெருமை சேர்த்துள்ளார்கள். இவ்வாறு மாணவர்களின் அறிவு திறனை விசாலப்படுத்தி ஒரு உலகளாவிய ஒருமைப்பாட்டு சூழலை இப்பள்ளி வழங்குகிறது. மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் பல நூல்களை கொண்ட பெரிய நூலகத்தை கொண்டுள்ளது. மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளை கற்றுகொள்ள பரந்த விளையாட்டு மைதானமும் அந்தந்த விளையாட்டுகளுக்கென பயிற்சிகளும், தொடர் பயிற்சிகளும் உள்ளன. பள்ளியில் பயிலும் மாணவ மாணவ மாணவிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ப வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.
|
|
மேல்நிலை வகுப்பில் சிறப்பு பாடங்களாக கணிதம், கணிப்பொறி அறிவியல், உயிரி-வேதியல், நுண்ணுயிரியல், வணிகவியல் போன்ற பாடங்கள் இக்கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களின் எதிகாலத்திற்கு சிறப்பான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பள்ளி ஒவ்வொரு மாணவ- மாணவியரும் அறிவிலும், ஆன்மீகத்திலும், ஆளுமைவளர்சியிலும், தன்னம்பிக்கையுடைய சுயசார்புடைய நிலையிலும் வளர அருட்தந்தை Dr. ராய் லாசர் பள்ளியை சிறப்பாக வழிநடத்துகிறார்.
|
சிறப்பம்சங்கள்
|
-
காற்றோட்டமுள்ள கவின்மிகு பள்ளிகட்டிடம்.
-
கல்வியோடு கலைத்திறமைகளும் வளர்க்கப்படுகின்றன.
-
அறிவியல் ஆய்வுக்கூடங்கள் - எதிர்கால விஞ்ஞானிகள்.
-
நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இன்றே இப்பள்ளியில் ஒளிர்கின்றன.
-
திறமையான ஜெர்மென் நாட்டு ஆசிரியர்கள் ஆசிரியைகள் - கடல் கடந்தும் வருகிறார்கள்.
-
நூலகம்-அறிவுப்பாசறை.
-
பரிசுகளும் பாராட்டுகளும், ஊக்கத் தொகைகளும் இங்கே நிறைய உண்டு.
|
PRAYER TO ST. JOSEPH
|
Oh, St. Joseph, whose protection is so great, so strong, so prompt before the throne of God, I place in you all my interests and desires. Do assist me by your powerful intercession and obtain for me from your divine Son all blessings for a happy and fruitful life. Bless us and help us to study well and fulfill our duties as best as possible. Bless our families, friends and all who help us to grow better. We ask this blessings in the name of our Lord Jesus Christ. Amen.
|
|
|
|